அனைவருக்கும் வணக்கம்..

ஜோதிட ஆசிரியர் திரு.ராஜகுரு அவர்கள் கோவில் நகரமாம் கும்பகோணத்தில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இளவயது முதலே படிப்பின் மீது மட்டுமல்லாமல், கலைகள் மீதும் ஆர்வம் கொண்டவர். பல புத்தகங்கள் மூலம் பல வித துறைகள் பற்றிய அறிவை வளர்த்து கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த பின், ஜோதிடத்தின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் திரு.காரை வேலுமயில் ஐயா அவர்களிடம் அடிப்படை ஜோதிடத்தை கற்று கொண்டார்…

அடிப்படை ஜோதிடத்தை மேலும் பல புத்தகங்கள் வாயிலாகவும் கற்று கொண்டபின் இணையதளம் மூலம் ஜோதிட கருத்துகளை தெரிவித்ததோடு, ஜோதிட பலன்களை மக்களுக்கு சொல்லியும் வந்தார்… அந்த நிலையில் சென்னையில் உள்ள ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் ஐயா அவர்களை சந்தித்த தருணம் நிகழ, 2012 ம் ஆண்டு உயர் கணித கே.பி. ஜோதிடத்தை கற்று கொண்டார்…

அன்று முதல் உயர் கணித கே.பி. ஜோதிட முறை மூலம் பலருக்கு நல்வழிகாட்டி வருகிறார். கற்ற விசயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தனது அனுபவத்தின் மூலமும், உள்ளுணர்வின் மூலமும், பல அறிஞர்களின் புத்தகங்கள் மூலமும் தனது அறிவை வளர்த்து கொண்டு தற்போது சிறப்பான முறையில் ஜாதக பலன்களை தன்னை தேடி வருபவர்களுக்கு உரைத்து வருகிறார்.

திருமணம், திருமண பொருத்தம் போன்ற விசயங்களில் இவரின் பலன்கள் தனித்தன்மை வாய்ந்தவை. சுமார் 5000 மேற்பட்ட ஜாதகங்களுக்கு மிக குறுகிய காலத்தில் பலன்களை வழங்கி நன்மைகள் பல புரிந்துள்ளார்.

ஜாதகம் பார்த்து பலன் உரைப்பதோடு, நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூலமும் ஜோதிடத்தை வளர்த்து வருகிறார்.